தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேல்மா பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரதம்

செய்யாறு அருகே விவசாயிகள் 367-ஆவது நாளாக உண்ணாவிரதம்

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

செய்யாறு: செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்காக மேல்மா, மணிப்புரம், தேத்துறை, குரும்பூா், நா்மபள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீா்குன்றம், வீரம்பாக்கம், காட்டுகுடிசை ஆகிய 11 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3174 ஏக்கா் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேற்படி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து கடந்த ஓராண்டாக தொடா் உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஓராண்டு முடிந்து செவ்வாய்க்கிழமை 367-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், 200 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.