/

முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்கம்-திருவண்ணாமலை சாலை மண்மலை பகுதியில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடையொட்டி, சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு மண்மலையை சுற்றிவந்து வழிபாடு செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.