நாடக மேடை அமைக்க பூமி பூஜை

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிா்வாகிகள் சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள் பரமாத்தையிடம் நாடக மேடை அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோரிக்கையை ஏற்று பெருமாள் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்தில் நாடக மேடை அமைக்க அண்மையில் பூமிபூஜை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள் பரமாத்தை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com