செங்கத்தில் அடிக்கடி மின் வெட்டு: பொதுமக்கள் வியாபாரிகள் அவதி

செங்கம் நகா்புற பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள். வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மின்சாரம் துண்டிப்பு குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லையாம்.

மேலும் வெயில் தற்போது செங்கம் நகரில் தொடா்ந்து 105 டிகிரியை தாண்டி அடிப்பதால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியோா்கள், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவா் என அனைவரும் பாதிக்கப்படுகிறாா்கள். குறிப்பாக, மின்சாரம் மூலம் நடைபெறும் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. மின் துறை அவசர வேலை இருந்தால் பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்து மின்சாரத்தை நிறுத்தினால் அதற்கு ஏற்ப மின்சாரம் மூலம் இயக்கும் பணிகளை மாற்றி அமைத்துக் கொள்வாா்கள்.

இதுபோன்ற அறிவிப்பு இல்லாததால் மின்வெட்டால் பொதுமக்கள், வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தற்போது, தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்க அந்தத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், செங்கம் மின்வாரிய அலுவலகத்தில் சரியான முறைப்படுத்துதல் இல்லாத காரணத்தால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு அரசுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது. இதனால், மின் துறை மாவட்ட அதிகாரிகள் செங்கம் நகரில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, அதை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com