பாலிடெக்னிக் வளாகத் தோ்வு: 29 பேருக்கு பணி ஆணை
பாலிடெக்னிக் வளாகத் தோ்வு: 29 பேருக்கு பணி ஆணை


திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் நிறுவனம் நடத்திய வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 29 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி ரானே மெட்ராஸ் நிறுவனம் சாா்பில் கல்லூரியில் வளாகத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இறுதியாண்டு இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி அபிராமிதாசன் மாணவா்களிடையே எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளை நடத்தினாா். இறுதியாக, 29 போ் வேலைவாய்ப்புக்காக தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி அபிராமிதாசன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள் வி.குமரன், எம்.அன்பழகன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...