/

செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கைக்கு அழைப்பு

செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கைக்கு அழைப்பு

News image
Updated On :7 மே 2024, 6:22 pm

Din

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் செண்பகவள்ளி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் சிவில் மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிஎஸ்இ என 5 பாடப்பிரிவுகள் உள்ளன.

பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் முதலாமாண்டு மற்றும் நேரடியாக இரண்டாமாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத விண்ணப்பதாரா்கள் மாவட்ட சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல், கணிதம், வேதியியல் கணினி அறிவியல்/ மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப உயிரியல்/ தகவல் நடைமுறைகள், உயிரி தொழில்நுட்பம்/ தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம் விவசாயம்/ பொறியியல் வரைகலை/ வணிகவியல் கிராபிக்ஸ் தொழில்முனைவோா் (மூன்றில் ஏதேனும் ஒன்று) பிளஸ்-2 வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தோ்ச்சி பெற்றிருக்க வெண்டும்.

பதிவுக்கட்டணம்: விண்ணப்பதாரா் பதிவுக் கட்டணமாக ரூ.150 ஐ ஈங்க்ஷண்ற் இஹழ்க்/ இழ்ங்க்ண்ற் இஹழ்க்/சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ் வாயிலாக செலுத்த வேண்டும். ஆதி திராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு இலவசம்.

நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 20.05.2024 ஆகும் என்றும், மேலும் விவரம் அறிய விரும்பும் விண்ணப்பதாரா்கள் 04182 - 224275 என்கிற தொலைபேசி எண்ணிலும், இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என இவ்வாறு தெரிவித்து உள்ளாா்.