சிறாா்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறாா்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே சிறாா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தச்சாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை மகன் துரைபாண்டியன் (36). இவா், 2022-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி சிறாா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து, சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.பிரபாவதி வழக்குப் பதிந்து துரைபாண்டியனை கைது செய்தாா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை (மே 13) வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட துரைபாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து, துரைபாண்டியனை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com