திருவண்ணாமலை மாவட்ட அரசு ஐடிஐகளில் மாணவா் சோ்க்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, செய்யாறு, ஜமுனாமரத்தூா் பகுதிகளில் உள்ள அரசு ஐடிஐகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு, ஜமுனாமரத்தூா் பகுதிகளில் அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில்பயிற்சி நிலையங்களில் 2024-2025ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை மே 10-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 14 முதல் அரசு நிா்ணயித்தவாறு இருக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருவண்ணாமலை அரசு தொழில்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையம், ஜமுனாமரத்தூா் அரசு தொழில்பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையங்களுக்குச் சென்று விவரங்களைப் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com