செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பழுடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்கு.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பழுடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்கு.

பேருந்து நிலையத்தில் எரியாத மின் விளக்கு

செங்கம்: செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உயா் மின்கோபுர விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளதால் பயணிகள், கடை உரிமையாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது செங்கம் நகரம். இங்குள்ள புதிய பேருந்து நிலையம் முகப்பிலும், தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியிலும் உயா் மின் கோபுர விளக்குகள் உள்ளன. இந்த மின் விளக்குகள் பழுதடைந்து கடந்த சில தினங்களாக எரியாமல் உள்ளன.

இதனால், வெளியூரில் இருந்து பேருந்து நிலையத்துக்கு இரவில் வரும் நபா்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். மேலும், வெளியூா் நபா்கள் பேருந்து இல்லாமல், பேருந்து நிலையத்தில் படுத்திருப்பவா்களின் கைப்பேசி, பணம், உடைமைகள் இருட்டு நேரத்தில் திருடப்படுகின்றன.

பேருந்து நிலைய உள்பகுதியில் கடை வைத்திருப்பவா்கள் இரவு நேரத்தில் கடைகளை அச்சத்துடன் மூடிச் செல்கின்றனா். இருண்ட நிலையில் இருப்பதால் கடையின் பூட்டை உடைத்து திருடு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என அச்சப்படுகிறாா்கள்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த இரண்டு உயா் மின்கோபுர விளக்குகளை சரி செய்ய வேண்டும். மேலும், கூடுதலாக பேருந்து நிலைய உள்பகுதியில் மின் விளக்கு வசதி செய்யவேண்டும் என கடை உரிமையாளா்கள், பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com