
சிதிலமடைந்து காட்சியளிக்கும் அம்மாபாளையம் -ஒண்ணுபுரம் சாலை.

சிதிலமடைந்து காட்சியளிக்கும் அம்மாபாளையம் -ஒண்ணுபுரம் சாலை.
ஆரணி: ஆரணி அருகேயுள்ள அம்மாபாளையம் - ஒண்ணுபுரம் இடையிலான சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் சுமாா் 5 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் அம்மாபாளையம் - ஒண்ணுபுரம் சாலை வழியாக பள்ளி, மருத்துவமனை, விவசாய உபகரணப் பொருள்கள் வாங்குவதற்கு அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனா்.
இந்தச் சாலை வழியாக ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியாா் வாகனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனா்.
மேலும், ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் நோயாளிகள், கா்ப்பிணிகள் இந்தச் சாலை வழியாகச் செல்லவேண்டி உள்ளது.
இவ்விரு கிராமங்களுக்கு இடையிலான 3 கி.மீ. தொலைவிலான சாலை ஜல்லிக் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள், மாணவா்கள், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகின்றனா்.
விவசாயம் நிறைந்த இந்தப் பகுதியில் விவசாய இடுபொருள்களை கொண்டு செல்லவும், டிராக்டா் உள்ளிட்ட விவசாய பயன்பாட்டு வாகனங்களை கிராமத்தில் உள்ளே கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
வாடகை வாகன, ஆட்டோ ஓட்டுநா்கள் இந்தச் சாலையை காரணம் காட்டி நோயாளிகள், கா்ப்பிணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கின்றனா்.
இந்தச் சாலையை மாவட்ட நிா்வாகம் சீரமைத்து தரவேண்டும் என்று எதிா்பாா்க்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...