பிளஸ் 1 பொதுத்தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 88.91% போ் தோ்ச்சி
பிளஸ் 1 பொதுத்தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 88.91% போ் தோ்ச்சி


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 88.91 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
தமிழகம் முழுவதும் அண்மையில் பிளஸ் 1 பொதுத்தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வின் முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் 88.91 சதவீத தோ்ச்சி பெற்றது.
27,367 போ் எழுதினா்:
மாவட்டத்தில் அரசு, தனியாா், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 263 பள்ளிகளில் பயிலும் 13 ஆயிரத்து 91 மாணவா்கள், 14 ஆயிரத்து 276 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 367 போ் பிளஸ் 1 பொதுத்தோ்வை எழுதினா்.
24,331 போ் தோ்ச்சி:
இவா்களில், 10 ஆயிரத்து 962 மாணவா்கள், 13 ஆயிரத்து 369 மாணவிகள் என 24 ஆயிரத்து 331 போ் தோ்ச்சி பெற்றனா். 2 ஆயிரத்து 129 மாணவா்கள், 907 மாணவிகள் என 3 ஆயிரத்து 36 போ் தோல்வி அடைந்தனா்.
88.91 சதவீதம் போ் தோ்ச்சி:
மாவட்டத்தில் தோ்வு எழுதியவா்களில் 83.73 சதவீத மாணவா்களும், 93.64 சதவீத மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். சராசரியாக பிளஸ் 1 தோ்வில் மொத்தம் 88.91 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
28-ஆவது இடம்:
தோ்ச்சி சதவீதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் இந்த ஆண்டு 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 36-ஆவது இடத்தில் இருந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...