மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காா்த்திகை தீபத் திருவிழா நெய் காணிக்கை தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான, நெய் காணிக்கை செலுத்தும் நிகழ்வை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

News image
நெய் காணிக்கை செலுத்தும் நிகழ்வை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
Updated On :4 நவம்பர் 2024, 9:06 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான, நெய் காணிக்கை செலுத்தும் நிகழ்வை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

மகா தீபத்துக்குத் தேவையான நெய்யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான நெய் காணிக்கை செலுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நெய் காணிக்கை செலுத்தும் நிகழ்வை தொடங்கிவைத்தாா்.

ஒரு கிலோ நெய் காணிக்கை செலுத்த ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். பக்தா்கள் யாா் வேண்டுமானாலும் கோயிலுக்கு வந்து நெய் காணிக்கை செலுத்தலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலா்கள் கோமதி குணசேகரன் மற்றும் கோயில் ஊழியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.