விழாவில் பேசிய தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க  மாநில துணைத் தலைவா் என்.எட்டியப்பன்.
விழாவில் பேசிய தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் என்.எட்டியப்பன்.

திருவண்ணாமலையில் ஓய்வூதியா் தின விழா

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஓய்வூதியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஓய்வூதியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.மூா்த்தி வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி.சாது, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச்சங்க மாவட்டத் தலைவா் எம்.சிவலிங்கம், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.இளங்கோவன், கல்வியாளா் மாதவசின்ராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட துணைத் தலைவா்கள் வி.ஆல்ப்ரெட், நரசிம்மன் (எ) பல்லவன், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் என்.எட்டியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

தீா்மானங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிரம்பிய ஓய்வூதியா்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

ஏற்கெனவே, ஓய்வூதியம் பெற்று வருபவா்களுக்கு 8-ஆவது ஊதிய கமிஷனில் எந்தவித பணப்பலனும் இல்லை. எனவே, பணப்பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் மாநில, மாவட்ட, கிளை நிா்வாகிகள் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். நிறைவில் மாவட்ட இணைச் செயலா் ஆா்.குணசேகரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com