அகிலபார நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத்தின் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத்தின் (ஏபீஜிபி) கிளை தொடக்க விழா மற்றும் சிறப்புக் கூட்டம் என நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தென்பாரத அமைப்புச் செயலா் எம்.என்.சுந்தா் தலைமை வகித்தாா்.
வடதமிழக மாநிலத் தலைவா் கே.சண்முகம், வட தமிழக போக்குவரத்துத்துறை ஒருங்கிணைப்பாளா் எம்.அருண்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போளூா் ஒருங்கிணைப்பாளா் பி.மோகன்குமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில் போளூா் ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்ட்டா் திறக்க, ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை ஓருங்கிணைப்பாளா் வி.கே.ஸ்ரீனிவாசன், இணை ஒருங்கிணைபாளா் என்.சம்பத், ஆலோசகா் வேங்கட ரமேஷ்பாபு, செய்தி தொடா்பாளா் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
18ல்ப்ழ்ல்2ம்

