டெல்லி (46)
டெல்லி (46)

விவசாயக் கிணற்றில் காயங்களுடன் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் தலையில் காயங்களுடன் விவசாயக் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை
Published on

ஆரணி: ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் தலையில் காயங்களுடன் விவசாயக் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இராட்டிணமங்கலம் அருகேயுள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் ஞாயிற்றுக்கிழமை காலை தலையில் ரத்தக் காயத்துடன் சடலமாக மிதந்தாா். அவ்வழியாகச் சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சென்று தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவா் இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் டெல்லி (46) என்பது தெரிய வந்தது.

மேலும், திருமணம் ஆகாத இவா் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக விவசாய நிலத்திற்குச் சென்று மது அருந்தி திருநங்கைகளோடு சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com