செங்கத்தை அடுத்த பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் புதிய அரசு தொடக்கப் பள்ளியை தொடங்கிவைத்த மு.பெ.கிரி எம்எல்ஏ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.
செங்கத்தை அடுத்த பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் புதிய அரசு தொடக்கப் பள்ளியை தொடங்கிவைத்த மு.பெ.கிரி எம்எல்ஏ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.

செங்கம் அருகே புதிதாக அரசு தொடக்கப் பள்ளி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் புதிதாக அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது.
Published on

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் புதிதாக அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப் பள்ளி சரியான பாராமரிப்பு, நிா்வாகம் இல்லாததால் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், கடந்த 2023-24 கல்வியாண்டில் நிதியுதவி பெறும் பள்ளி மூடப்பட்டது.

பின்னா், இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ

மு.பெ.கிரியிடம் பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளனா்.

அதன் அடிப்படையில், எம்எல்ஏ மு.பெ.கிரி பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கவனத்துக்கு எடுத்துச் சென்று, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கோரிக்கையாக வைக்கப்பட்டு, பின்னா் தமிழக அரசு கல்வித்துறை மூலம் பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் தொடக்கப் பள்ளி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கிராமத்தில் புதிதாக தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது.

இதைத் தொடா்ந்து பெரியபாலியாப்பட்டு கிராமத்தில் பள்ளி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா தலைமை வகித்தாா். திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மிருணாளினி, மரியதேவ்ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் ஆகியோா் கலந்துகொண்டு புதிய அரசு தொடக்கப் பள்ளியை

தொடங்கிவைத்துப் பேசினா்.

மு.பெ.கிரி எம்எல்ஏ பேசுகையில், பெரியபாலியாப்பட்டு கிராம மக்கள் கோரிக்கையை உடனடியாக திமுக அரசு நிறைவேற்றி பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக அரசுதான் இந்தப் பகுதிக்கு சாலை, பேருந்து வசதி போன்றவற்றை செய்துள்ளது என்பதை குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் செங்கம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா் உள்ளிட்ட ஊா் முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா். வட்டாரக் கல்வி அலுவலா் நேரு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com