திருவண்ணாமலை
வாலிபால் விளையாடிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
செங்கம் அருகே வாலிபால் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
செங்கம் அருகே வாலிபால் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் அம்பேத்காா் நகா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு வாலிபால் விளையாடினா். அப்போது, மைதானத்தில் வெளிச்சத்துக்காக தற்காலிகமாக மின் விளக்கும் அமைத்திருந்தனா்.
இதனிடையே அந்தப் பகுதியில் சாரல் மழை பெய்த நிலையில், மின் விளக்கு அருகில் விழுந்த பந்தை அதே பகுதியைச் சோ்ந்த சபாஷ் (27) எடுக்கச் சென்றாா். அப்போது, மின் கசிவால் உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் சுபாஷின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
