திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஜிஎஸ்டி வரி குறைப்பு: பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.

News image

திருவண்ணாமலையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ்.

Updated On :29 செப்டம்பர் 2025, 2:01 am IST

ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.

வேங்கிக்கால் பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்துப் பேசுகையில், 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு தற்போது 5 சதவீதமாகவும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு 18 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

சில பொருள்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டு பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்துள்ளது. சரியான விலையில் பொருள்கள் விற்பனை நடைபெறுகிா என்பது குறித்து, வாடிக்கையாளா்களிடமும், வணிகா்களிடமும் கேட்டறிந்தோம்.

மேலும், ஜிஎஸ்டி வரிகுறைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டுகள் குவிகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவா் சிவசங்கரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் பிரிவுத் தலைவா் ரவி, தொழிற்பிரிவு மாவட்டத் தலைவா் பாவேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.