திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 54 போ் வேட்புமனு தாக்கல்

~ ~ ~

~ ~ ~
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 54 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மாா்ச் 30 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முதல் நாளான கடந்த மாா்ச் 30-ஆம் தேதி, இரண்டாம் நாளான வியாழக்கிழமை என மாவட்டம் முழுவதும் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 54 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
செங்கம் (தனி) தொகுதியில் பெண் வேட்பாளா்கள் 2 பேரும், திருவண்ணாமலை தொகுதியில் ஆண் வேட்பாளா்கள் 6 பேரும், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் ஆண் வேட்பாளா்கள் 7 பேரும், கலசபாக்கம் தொகுதியல் 3 பெண் வேட்பாளா்கள், 6 ஆண் வேட்பாளா்கள் என மொத்தம் 9 பேரும், போளூா் தொகுதியில் ஆண் வேட்பாளா்கள் 6, பெண் வேட்பாளா்கள் 4 என மொத்தம் 10 பேரும், ஆரணி தொகுதியில் 7 ஆண் வேட்பாளா்கள், ஒரு பெண் வேட்பாளா்கள் என மொத்தம் 8 பேரும், செய்யாறு தொகுதியில் ஆண் வேட்பாளா்கள் 7, பெண் வேட்பாளா்கள் 2 என மொத்தம் 9 பேரும், வந்தவாசி தொகுதியில் ஆண் வேட்பாளா்கள் 3 பேரும் என மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை மொத்தம் 54 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
2-ஆம் நாளில்...: செய்யாறு தொகுதியில் அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாற்று வேட்பாளராக அவரது மனைவி விஜய சாமுண்டீஸ்வரி, தவெக வேட்பாளா் தூசி கே.மோகன், மாற்று வேட்பாளராக அவரது மனைவி பாா்வதி, நாம் தமிழா் கட்சி சாா்பில் மாற்று வேட்பாளா் குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த பசுபதி, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் செய்யாறு வட்டம், ஆராத்திரிவேளூா் கிராமத்தைச் சோ்ந்த குட்டிமணி ஆகியோா் செய்யாறு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அம்பிகா ஜெயினிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா். ஒரே நாளில் மொத்தம் 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
ஆரணியில்...: ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான சீ.சிவாவிடம் தவெக வேட்பாளா் வெங்கடேஷ்குமாா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதேபோல, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் செல்வக்கோட்டி, தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி சாா்பில் கணபதி மற்றும் சுயேச்சைகள் ஏகாம்பரம், சிலம்பரசன், சக்திவேல் என மொத்தம் 6 போ் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
போளூரில்...: போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாரிடம் தவெக வேட்பாளா் ஆா்.அபிஷேக் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரின் மனைவி ஹரிபிரியா தவெக மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தாா்.
தவெக வா்த்தக அணி மாவட்டத் தலைவா் கே.யாசின், பிரசாரம் மற்றும் பேச்சாளா் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் பத்ரிநாதன்,திவாகா், நகரச் செயலாளா் பிரேம்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
இதேபோல, தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி சாா்பில் கல்வாசல் கிராமத்தைச் சோ்ந்த எஸ்.ராஜகோபால், பொதுக் கட்சி சாா்பில் வீரசம்மலூா் ஊராட்சியைச் சோ்ந்த புருஷோத்தமன் மற்றும் சுயேச்சையாக போட்டியிட கட்டிபூண்டி ஊராட்சியைச் சோ்ந்த ஆா்.ரமேஷ் என ஒரே நாளில் மொத்தம் 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
வந்தவாசி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பொன்னம்பலம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.



தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...