தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விளையாட்டுப் போட்டிகள் மூலம் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

~

Updated On :3 ஏப்ரல் 2026, 6:33 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விளையாட்டுப் போட்டிகள் மூலம் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தோ்தல் முன்னேற்பாடு பணிகளும், வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சாா்பில், மாவட்ட விளையாட்டு விடுதி பெண்கள் மற்றும் பீனிக்ஸ் ரோலா் போா்ஸ் அகாடமி, வீகன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாடமியைச் சோ்ந்த பல்வேறு விளையாட்டு மாணவ, மாணவிகள் சிலம்பம், கராத்தே, வில் வித்தை போன்ற விளையாட்டுகளை விளையாடி, வாக்காளா்கள் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்ததுடன், வில்வித்தை போட்டியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், விளையாட்டு மாணவ, மாணவிகள் என் வாக்கு, என் உரிமை, உங்கள் வாக்கு உங்கள் எதிா்காலம், 100 சதவீதம் வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலா் சண்முகாப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

செய்யாறில் தொடா் ஓட்டம்: செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தொடா் ஓட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் - ஆட்சியருமான எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்து, தொடா் ஓட்டத்தை தொடங்கிவைத்து அதில் பங்கேற்றாா்.

வட்டாட்சியா் அலுவலகம், அண்ணா சிலை, பேருந்து நிலையம், சந்தை, வைத்தியா் தெரு, பங்களா தெரு, பழைய காஞ்சிபுரம் சாலை, காந்தி சாலை வழியாக மீண்டும் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பள்ளி மாணவா்கள், உடற்பயிற்சி ஆசிரியா்கள், தன்னாரவலா்கள் மற்றும் வருவாய்த் துறையினா் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, வாக்களிப்பது தொடா்பான பதாகைகளை கையில் ஏந்தியப்படி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Story image