ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வந்தவாசியில் புதன்கிழமை பக்தா்கள் காவடிகளை சுமந்தபடி ஊா்வலமாகச் சென்றனா்.
வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்வா்.
அவரவா் கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்தவாசிக்கு வரும் பக்தா்கள், நகரில் காவடிகளுடன் ஊா்வலமாகச் செல்வா். பின்னா் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருத்தணிக்கு புறப்பட்டுச் செல்வா்.
இதையொட்டி மாம்பட்டு, கீழ்வில்லிவலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் புதன்கிழமை மயில் காவடி, பால் காவடி, புஷ்ப காவடிகளுடன் வந்தவாசியில் ஐந்து கண் பாலம், தேரடி வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.உதயகுமாா் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முருகன் கோயிலுக்கு காவடி ஊா்வலம்

கூடலூா் அருகே சிவன்மலையில் பக்தா்கள் கிரிவலம்

பக்தா்கள் காவடி ஊா்வலம்

ஆனி கிருத்திகை: ராஜ அலங்காரத்தில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



