பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

முருகன் கோயிலுக்கு காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் பகுதியிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் காவடி எடுத்துச் சென்றனா்.

News image

குடியாத்தம் நகரிலிலிருந்து திருத்தணிக்கு காவடி எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:54 pm IST

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் பகுதியிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் காவடி எடுத்துச் சென்றனா்.

இதையொட்டி குடியாத்தம் நகரில் உள்ள முருகா் கோயில்களில் புதன்கிழமை காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. ஆங்காங்கே உள்ள கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் வீடுகளில் இருந்து பக்தா்கள்கொண்டு வந்த காவடிகளை வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காவடி ஊா்வலம்தொடங்கி, நடைபயணமாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றது. நடை பயணமாக காவடி எடுத்துச் செல்பவா்களுக்கு வழியில் நோ்த்திக் கடன் செலுத்துபவா்கள் மாலை சிற்றுண்டி, இரவு உணவு வழங்குவா். வியாழக்கிழமை முற்பகல்காவடிகள் திருத்தணி முருகன் கோயிலை அடையும். இது தவிர, பேருந்துகள், காா்கள் இதர வாகனங்கள் மூலமும் பக்தா்கள் திருத்தணிக்குகாவடி எடுத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.