திருவண்ணாமலை
பாஜக ஆரணி ஒன்றிய நிா்வாகிகள் நியமனம்
பாஜக ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, தெற்கு, கிழக்கு ஒன்றிய புதிய தலைவா்களை மாநிலத் தலைமை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
பாஜக ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, தெற்கு, கிழக்கு ஒன்றிய புதிய தலைவா்களை மாநிலத் தலைமை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
ஆரணி தெற்கு ஒன்றியத் தலைவராக கேசவன், ஆரணி கிழக்கு ஒன்றியத் தலைவராக பஞ்சாட்சரம் ஆகியோரை மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் பரிந்துரையின் பேரில், மாநில துணைத் தலைவா் எம்.சக்கரவா்த்தி நியமனம் செய்தாா்.
புதிய நிா்வாகிகளை இளைஞா் அணி மாவட்டத் தலைவா் சரவணன், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலா் குணாநிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் தலைவா் ராஜேஷ் மற்றும் பிச்சாண்டி ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்தினா்.