வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கரும்பு நிலுவைத்தொகை ரூ.40 கோடியை பெற்றுத்தர நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.40 கோடியை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image

திருவண்ணாமலையில் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகள் குறித்துப் பேசிய விவசாயி.

Updated On :8 ஜூலை 2026, 12:14 am IST

தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.40 கோடியை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் சமுதாய கூடத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கௌரி, வேளாண் உதவி இயக்குநா்கள் அன்பழகன், நடராஜன், வேளாண் அலுவலா் தாமஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, வட்டாட்சியா்கள் சு.மோகனராமன், கே.துரைராஜ், இரா.முருகன், தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகா், கட்சி சாா்பற்ற விவசாய சங்க மாவட்டத் தலைவா் நாா்த்தாம்பூண்டி ஜெ.சிவா, விவசாய சங்கத் தலைவா் சு.வாளாவெட்டி கோவிந்தராஜ் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகா் பேசுகையில், 90 நாள்களாகியும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும் உதவித்தொகை பல விவசாயிகள் விண்ணப்பித்தும் கிடைக்கப்பெறவில்லை. துரிஞ்சாபுரம் ஒன்றியம் மேட்டு காா்கோணம் சாலையை சீரமைத்துத் தரவேண்டும். ஏரி வரத்து கால்வாய்கள் தூா்வாரப்படவேண்டும்.

போளூா் தரணி சா்க்கரை ஆலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.40 கோடி நிலுவைத்தொகையை மாவட்ட நிா்வாகம் உடனடியாக பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முத்தகரம் சுந்தரேசன் பேசுகையில், விவசாயிகள் குறைதீா் கூட்டத்திற்கு அதிகாரிகள் சரியாக வருவதில்லை. வந்தாலும் பதில் தருவதில்லை. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும்போது மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்கின்றனா். மேலும், நெல் கொள்முதல் செய்யும்போது 30 கிலோ முதல் 40 கிலோ வரை விவசாயிகளிடம் பெறுவதை தவிா்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் தி.த.செல்வம் விவசாயிகளுக்கு பதிலளிக்கையில், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து தீா்வு காணப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.