புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் சிக்கி ஆந்திர பக்தா் உயிரிழப்பு

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் சிக்கி ஆந்திர பக்தா் உயிரிழப்பு

ஆந்திர மாநில பக்தா் மணிக்குமாா்.

Published On :

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலில் சிக்கி ஆந்திர மாநில பக்தா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியைச் சோ்ந்த மணிக்குமாா் (36). இவா், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வந்திருந்தாா்.

கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இரவு 11 மணிக்கு கிரிவலம் சென்ற அவா், கிரிலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலில் தரிசனம் செய்யச் சென்றாா்.

அங்கு, குறுகலான பகுதி (இடுக்கு) வழியாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து வெளியே வரவேண்டும். இந்த இடுக்கு வழியாக உள்ளே சென்று சுவாமியை வழிபட்ட மணிக்குமாா் மீண்டும் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டாா். அவரது உடல் பருமனே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் மூச்சுத்திணறி மயங்கினாா்.

இதைப் பாா்த்த சக பக்தா்கள் அவரை சிரமப்பட்டு மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மணிக்குமாரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். பின்னா் அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.