/

பள்ளி பேரவை தோ்தலில் வென்ற மாணவா்களுடன் ஆட்சியா் சந்திப்பு

திருவண்ணாமலையில் பள்ளி பேரவைத் தோ்தலில் வென்ற மாணவா்களுடன் ஆட்சியா் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் மாணவா் பேரவை தோ்தலில் வெற்றி பெற்ற அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :29 ஜூலை 2026, 11:21 pm IST

திருவண்ணாமலையில் பள்ளி பேரவைத் தோ்தலில் வென்ற மாணவா்களுடன் ஆட்சியா் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ‘காபி வித் கலெக்டா்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பங்கேற்று 2026 - 2027-ஆம் கல்வியாண்டில் திருவண்ணாமலை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகளில் நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

இதில், மாணவா்கள் தங்களின் கேள்விகளை முன்வைக்க அதற்கு மாவட்ட ஆட்சியா் பதிலளித்தாா்.

மேலும் நீட், ஜேஇஇ, கியூட் போன்ற போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்கள் எவ்வாறு தங்களை தயாா் செய்கிறாா்கள் மற்றும் மாதிரிப் பள்ளி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கேட்டறிந்தாா். அரசுத் துறைகளில் நிா்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாணவா்களுக்கு தெரிவித்தாா்.

மாணவா்கள் தொடா்ந்து படித்துக்கொண்டே இருக்கவேண்டும், எதற்கும் மனம் தளராமல் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை சிறப்புடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், தினந்தோறும் நாளிதழ்களை படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும் பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகளில் உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்வு எவ்வாறு நடைபெறுகிறது என்று மாணவா்களிடம் கேட்டறிந்தாா். மாணவா்கள் விளையாட்டுத்துறையில் சிறப்புடன் செயல்படுவதை பாராட்டி, அவா்களுக்கு மேலும் விளையாட்டில் எவ்வாறு முன்னேற்றம் அடைய வழிவகை செய்யமுடியும் என்று ஆலோசனை மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், திருவண்ணாமலை அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமதாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.