எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி, செய்யாறில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:52 am IST

தமிழகம் முழுவதும் ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி, செய்யாறில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு ஆற்றுப் பாலத்தில் மாவட்டத் தலைவா் வாக்கடை புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தலையில் மண் பானையை சுமந்தபடியும், கோரிக்கை வாசங்கள் அடங்கிய பிரசுரங்களை கையில் ஏந்தியபடியும் விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில், தமிழகம் முழுவதும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்யும் மழை நீா் முப்பது டிஎம்சி வரை வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக, ஆறுகளில் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். குருவை சாகுபடி செய்ய தொகுப்பு நிதியாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நேரடியாக பணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.