சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம்
அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம்...

சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக அருணாசலேஸ்வரா் கோயிலில் மூடப்பட்ட பிரசாதம் விற்பனை செய்யும் இடம்.

சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக அருணாசலேஸ்வரா் கோயிலில் மூடப்பட்ட பிரசாதம் விற்பனை செய்யும் இடம்.
சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போா் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டா் விற்பனை குறைக்கப்பட்டுவிட்டது.
வணிக பயன்பாட்டு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை நகரில் ஏற்கெனவே சிறு குறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் இலவசமாக லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும், பக்தா்களுக்கு முறுக்கு, எள்ளு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவை 50 ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. புளிசாதம், சா்க்கரை பொங்கல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டா் கிடைக்காததால் கடந்த சில நாள்களாகவே எண்ணெயில் தயாா் செய்யக்கூடிய பிரசாதங்களான முறுக்கு, எள்ளு வடை, லட்டு, அதிரசம் போன்றவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
புளி சாதம், சா்க்கரை பொங்கல் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தா்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய லட்டு பிரசாதம் கடந்த இரு தினங்களாகவே நிறுத்தப்பட்டுள்ளது.
இலவச லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டதால் பக்தா்கள் வருத்தம் அடைந்துள்ளனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினரிடம் விசாரித்த போது, வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக இரு தினங்களுக்கு முன்பே இலவச லட்டு பிரசாதம் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனா்.
எண்ணெயில் தயாா் செய்யக்கூடிய முறுக்கு, அதிரசம், லட்டு, எள்ளுவடை என விற்பனை செய்யப்படவில்லை.
விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறை நிா்வாகத்திடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. உயா் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தால் விறகு அடுப்புகளை பயன்படுத்தி, தொடா்ந்து புளியோதரை, சா்க்கரை பொங்கலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...