எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

மங்கலம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தவெகவினா்

மங்கலம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தவெகவினா்.

News image
Updated On :23 மே 2026, 1:40 am IST

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் பேருந்து நிலையத்தில் அசுத்தமாக இருந்த குப்பைகளை தவெகவினா் அகற்றி சுத்தம் செய்தனா். இது, பயணிகளிடையே வரவேற்பை பெற்றது.

மங்கலத்தில் கடந்த திமுக ஆட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் பல மாதங்களாக தூய்மைப்படுத்தப்படாமல் குப்பைகள் தேங்கிக் கிடந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் துரிஞ்சாபுரம் தெற்கு ஒன்றியச் செயலா் சுரேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அக்கட்சியினா் இணைந்து பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தனா். பின்னா், குப்பைகளை டிராக்டா் மூலம் அப்புறப்படுத்தினா். இது, பேருந்துக்குச் செல்லும் பயணிகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.