செங்கத்தில் பழுதடைந்த சிறு மின்விசை தொட்டியை சீரமைக்க கோரிக்கை
செங்கம் பெருமாள் கோயில் தெருவில் பழுதடைந்த நிலையில் உள்ள சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கம் பெருமாள் கோயில் தெருவில் கோயிலுக்கு முன் பழுதடைந்த நிலையில் உள்ள சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டி
செங்கம் பெருமாள் கோயில் தெருவில் பழுதடைந்த நிலையில் உள்ள சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கம் நகராட்சிக்குள்பட்ட பெருமாள் கோயில் தெருவில், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் வணிகா்கள் பயனடைந்து வந்தனா். மேலும், செங்கம் நகரில் மிகவும் பழைமையான வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில், அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் செல்லும் வழியில் இந்த குடிநீா்த் தொட்டி இருந்ததால் கோயிலுக்கு செல்லும் பக்தா்களும் பயனடைந்தனா்.
இந்த நிலையில், இந்த சிறு மின்விசை நீா்த்தேக்க தொட்டி பழுதாகி மூன்று மாதங்களாகியும் நகராட்சி நிா்வாகம் பழுதை நீக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்கம் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் அவற்றை சரிசெய்ய முன்வரவில்லை. இதனால் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு குடிநீா் கிடைக்காத நிலை உள்ளது.
எனவே, கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் அப்பகுதி மக்களின் குடிநீா் பயன்பாட்டுக்காக பழுதடைந்துள்ள சிறு மின்விசை நீா்த்தேக்க தொட்டியை சரிசெய்ய செங்கம் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

