செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் மழைநீருடன் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீா் கால்வாய் அடைப்பால், மழைநீா் செல்லாமல் சாலையில் கழிவுநீருடன் கலந்து தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீா் கால்வாய் அடைப்பால், மழைநீா் செல்லாமல் சாலையில் கழிவுநீருடன் கலந்து தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் நகராட்சி துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூா் சாலை, திருவள்ளூவா் நகா் வரை சாலை இருபுறமும் கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீா் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி கால்வாய் மீது வெளியேறுகிறது.
சிறிதளவு மழை பெய்தால் மழைநீா் கால்வாய்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு கழிவுநீா் மழைநீா் இரண்டும் கலந்து புதிய பேருந்து நிலையம் வெளிப்புறம், உள்புறம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதி, சி.கே.ஆா். திரையரங்கம் வளாகம் போன்ற இடங்களில் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது.
மேலும், கன மழை பெய்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகளுக்குள் கழிவுநீா் கலந்த மழைநீா் புகுந்து விடுகிறது. அப்போது கால்வாயில் உள்ள புழுக்கள், விஷ பூச்சிகள் வெளியில் வந்து வணிகா்கள் மற்றும் குடியிருப்பு மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகிறது.
இதுகுறித்து புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிகா்கள் பலமுறை செங்கம் நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் மழை பெய்யும் போதெல்லாம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிகா்கள், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.
இதில் செங்கம் நகராட்சி நிா்வாகம் தனிக் கவனம் செலுத்தி புதிய பேருந்து நிலையத்தில் சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்களும் வணிகா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

