கார்த்திகை தீபம்: 3 நாள்களில் ரூ. 62 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டிய திருவண்ணாமலை ரயில் நிலையம்!
கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி, 3 நாள்களில் ரூ. 62 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டிய திருவண்ணாமலை ரயில் நிலையத்தைப் பற்றி...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். - Dinamani
கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி வெறும் 3 நாள்களில் திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ. 62 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் பல்வேறு மாநிலங்களில் இருந்து 40 முதல் 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம்.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்பவர்களுக்காக மாதந்தோறும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. அதேபோன்று கார்த்திகை தீப விழாவிற்காக பக்தர்கள் பெருமளவில் திரளுவார்கள் என்று கணிக்கப்பட்டு கூட்ட நெரிசலைத் திறம்பட கையாளுவதற்காக நவ. 23 முதல் நவ. 25 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அதில், திருச்சியிலிருந்து வேலூர் கண்டோன்மென்ட், விழுப்புரம் முதல் வேலூர் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வரை என 600-க்கும் மேற்பட்ட முன்பதிவில்லாத பெட்டிகளுடன் பிரத்யேகமாக 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் முன்பதிவற்ற மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளின் விற்பனை மூலம் சுமார் ரூ. 60 லட்சம் வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்பாடி - விழுப்புரத்துக்கு இடைப்பட்ட புறநகர் அல்லாத 4 ஆம் தரம் கொண்ட திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தீபத் திருவிழாவையொட்டி, சிறப்பு டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள், பயணிகளின் பாதுகாப்புக்கென பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருச்சி ரயில்வே கோட்டம் மேற்கொண்டிருந்தது.
டிக்கெட் முன்பதிவுகளுக்கான இரண்டு டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி முறையில் இயங்கும் மூன்று டிக்கெட் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, டிக்கெட் முன்பதிவு நிலையங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த நவ. 23 ஆம் தேதி ரூ. 5.29 லட்சமும், கார்த்திகைத் தீபநாளான நவ. 24 ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டி ரூ. 29.5 லட்சமும், அதற்கு அடுத்த நாள் (நவ. 25) ரூ. 27 லட்சமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. மொத்தமாக சுமார் ரூ. 62 லட்சம் வரை வருவாய் ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு 85,000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Summary
Tiruchi Railway Division had made comprehensive arrangements for issue of tickets, crowd management, and 24 special trains were operated to the temple town to clear the extra rush
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

