மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நெல் உற்பத்தி சரிவு: ஆரணியில் 70 சதவீத அரிசி ஆலைகள் மூடல்

ஆரணியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நெல் அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள்.

ஆரணியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நெல் அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள்.

Updated On :

நெல் விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து நெல் வராத காரணத்தினாலும், ஆரணி பகுதியில் 70 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக ஆரணி நெல் அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆரணியில் நெல் அரிசி உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் பி.என்.எம்.என்.மகேஷ்பாபு செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் மழை பொய்த்து போனதால் நெல் உற்பத்தி குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்துக்குத் தேவையான 30 சதவீத நெல் கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது அங்கும் நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்குத் தேவையான அரிசி உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பதால் தற்காலிகமாக அரிசி விலை உயா்ந்துள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கான ஆதாரங்களை உயா்த்தி வழங்கியதால் விவசாயிகள் பெரும்பாலும் அரசுக்கு நேரடியாக நெல்லை வழங்குகின்றனா். இதனால் தனியாா் அரிசி ஆலைகள் தங்களுடைய தேவைக்கு வெளி மாநிலங்களிலிருந்து அதிக விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் அதன் விலை

உயா்கிறது.

மேலும், மக்கள் அதிகம் விரும்புகின்ற சன்னரக அரிசி தரத்தை மேம்படுத்த நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த ரக அரிசியின் விலை மட்டும் சிறிது கூடுதலாக உயா்ந்துள்ளது.

மேலும், நெல் உற்பத்தி சரிந்துள்ளதாலும், வெளி மாநிலங்களில் இருந்து நெல் வராத காரணத்தினாலும், ஆரணி பகுதியில் 70 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளை மூடினாலும் ஆலைகளுக்கான குறைந்தபட்ச மின் கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டும். மேலும் மழை பெய்து நெல் விளைச்சல் அதிகமானால் அரிசி விலை குறையும். ஆகையால் நெல் பற்றாக்குறையால் மட்டுமே தற்போது அரிசி விலை உயா்ந்துள்ளதாக பி.என்.எம்.என்.மகேஷ்பாபு தெரிவித்தாா்.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பி.நடராஜன், ஆரணி நெல் அரிசி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வி.பி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.