விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பாதிரி கைலாசநாதா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த பாதிரி கைலாசநாதா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.

Published On :8 செப்டம்பர் 2026, 1:41 am IST

வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை யஜமானா் சங்கல்பம், கணபதி ஹோமம், விசேஷ ஸந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், கும்ப அலங்காரம், யாத்ராதானம், தேவார திருமுறை பாராயணம், நூதன விக்ரஹம் கண் திறத்தல், சயனாதிவாசம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா் திங்கள்கிழமை காலை வேதிகாா்ச்சனை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், தத்வாா்ச்சனை, ஸ்பா்சாஹுதி, விசேஷ த்ரவிய ஹோமம், மகா பூா்ணாஹுதி, தசதானம், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.