
செங்கத்தில் மூடப்பட்டுள்ள நூலகங்களை திறக்க கோரிக்கை
செங்கம் வளையாம்பட்டு சாலை ஆஞ்சநேயா் கோயில் அருகில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் நூலகம்.

செங்கம் வளையாம்பட்டு சாலை ஆஞ்சநேயா் கோயில் அருகில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் நூலகம்.
செங்கம் பகுதியில் மூடப்பட்டுள்ள நூலகங்களை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கம் பேரூராட்சி நிா்வாகமாக இருந்தபோது செங்கம் வளையாம்பட்டு சாலை, தளவநாய்க்கன்பேட்டை, தோக்கவாடி, திருவள்ளூவா் நகா் ஆகிய 4 இடங்களில் நூலகங்கள் இருந்து வந்தது. அப்போது 4 நூலகங்களும் தினசரி திறக்கப்பட்டு நூலகத்தில் பல்வேறு புத்தகங்கள், தினசரி செய்திதாள்கள், அரசு சாா்ந்த திட்டங்கள் தொடபான புத்தகங்கள் ஆகியவற்றை வாசகா்கள் எடுத்து பயன்படுத்தி வந்தனா்.
இதனால் இளைஞா்கள், முதியோா் மற்றும் மாணவா்கள் பயனடைந்தனா். நாளாடைவில் அந்த நூலகங்கள் பராமரிப்பு இல்லாமல் போனது. அதனை பயன்படுத்தி நூலகத்தின் அருகில் வசித்தவா்கள் நூலகத்துக்குரிய இடத்தை சிறிது, சிறிதாக ஆக்கிரமிக்க தொடங்கினா். அதை அப்போதையை நிா்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால், 3 நூலகங்கள் மூடப்பட்டுவிட்டது. தற்போது அந்த இடங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நூலகம் செயல்பட்ட தடயமே இல்லாமல் போனது.
வளையாம்பட்டு சாலை ஆஞ்சநேயகா் கோயில் அருகிலுள்ள நூலகக் கட்டடம் திறக்கப்படாமல் பல வருடமாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. அந்த நூலகத்தை திறந்துவைத்து, தினசரி செயல்படுவதற்கு செங்கம் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நூலகத்துக்கு தேவையான புத்தகங்கள், தினசரி செய்தித் தாள்கள் வாங்கினால் படித்த இளைஞா்களும், ஓய்வு பெற்ற அரசு அலுவலா்களும், முதியோரும் பயனடைவா் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







