சிறப்பு மனுநீதி நாள் முகாம்

நெமிலி வட்டம் பன்னீயூர்,  புதுப்பட்டு, ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஆலப்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நெமிலி வட்டம் பன்னீயூர்,  புதுப்பட்டு, ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஆலப்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நெமிலி வட்டாட்சியர் பாஸ்கரன் வரவேற்றார்.
முகாமில், வீட்டு மனை பட்டா, சிறு, குறு விவசாயிகள் சான்று, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை தொடர்பாக 169 மனுக்கள் வரப்பெற்றன. இவற்றில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 50 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 106 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கான சான்றுகளை மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் வழங்கினார். 
நெமிலி சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகன், மண்டலத் துணை வட்டாட்சியர் காஞ்சனா, காவேரிபாக்கம் வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் முரளிதரன், ரகு, மணிகண்டன், ராமு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com