மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், தமிழக ஆளுநரின் துணைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 5:50 am IST

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், தமிழக ஆளுநரின் துணைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் தா.செங்கோட்டையன். இவர் கடந்த ஓராண்டாக இங்கு பணியில் இருந்து வந்தார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்களின் பணி குறித்த கோப்புகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார். இதில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் சிறப்பாகப் பணி செய்து வந்ததை அறிந்தார். இதையடுத்து தமிழக ஆளுநரின் பரிந்துரைக்கு ஏற்ப செங்கோட்டையனை தமிழக ஆளுநரின் துணைச் செயலராக இடமாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
செங்கோட்டையன் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக உடனடியாக யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்படும் வரை அந்தப் பணியை கூடுதலாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கவனிப்பார் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.