பள்ளிகளில் சத்துணவு ஊழியராக வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி பெண் ஊழியர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் மாலா (41), லட்சுமி (39). இவர்கள் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.
அதில், கடந்த ஆண்டு வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அறிமுகமானதாகவும், அவர்கள் தனக்கு பல அதிகாரிகளையும் தெரியும், அவர்களிடம் தெரிவித்து மாநகராட்சி பள்ளிகளில் சத்துணவு ஊழியர் வேலைவாங்கித் தருவதாகவும் கூறினார். அதற்கு இருவரிடமும் தலா ரூ. 1 லட்சம் செலவாகும் என தெரிவித்தார்.
அதை நம்பி இருவரும் ரூ. 2 லட்சம் அளித்தோம். ஆனால், ஓராண்டாகியும் கூறியபடி வேலைவாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பியளிக்கவில்லை.
மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சிப் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர் பெற்ற பணத்தையும் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இப்புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முழு சூரிய கிரகணம்: புகைப்படங்கள்

டிஜிட்டல் கைது: சிபிஐ பெயரில் முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.50 கோடி மோசடி!

ஓடிடியில் வெளியான துஷாரா விஜயனின் காட்டாளன்!

சுதந்திர தின விழா: புனித ஜார்ஜ் கோட்டையில் மூன்றாவது ஒத்திகை!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |


