இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் 
Updated on
1 min read

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்  ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.நியாஸ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் கே.ஏ.சேகர்,  முன்னாள் துணைத் தலைவர் டி.மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ஜெ.அசேன் மத்திய அரசைக் கண்டித்து  பேசினார். இதில், ஆற்காடு நகரத் தலைவர் கண்ணன், ஆற்காடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெ.நியாஸ் அலி, பொதுச் செயலாளர்  ஆர்.முஹமது ஷபி, மாவட்ட துணைத் தலைவர்  பிரபாகரன், நிர்வாகிகள் பியாரேஜான், ஏ.ஜி.சேதுராமன், 
அல்தாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com