குடியாத்தம் நகர பாமக செயலரை மர்ம கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொல்ல முயற்சித்தது குறித்து போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(38). இவர், குடியாத்தம் நகர பாமக செயலராக உள்ளார். நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.திங்கள்கிழமை காலை இவர் நடுப்பேட்டை தாடி அருணாசலம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் இவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.
அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் வேலூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


