டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

வாலாஜாபேட்டையில் திருடுபோன அம்மன் சிலை பென்னாகரத்தில் மீட்பு

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் திருடப்பட்ட படவேட்டம்மன் உலோகச்  சிலை பென்னாகரத்தில் மீட்கப்பட்டது.

Updated On :24 ஜூலை 2018, 12:37 am IST

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் திருடப்பட்ட படவேட்டம்மன் உலோகச்  சிலை பென்னாகரத்தில் மீட்கப்பட்டது.
வாலாஜாபேட்டை பஜனை கோயிலில் இருந்த படவேட்டம்மன் உலோகச் சிலை  உள்ளிட்ட மூன்று சிலைகள் கடந்த  2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருடுபோயின. இதுகுறித்து தமிழக இந்துசமய அறநிலையத் துறை  ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே எரப்பட்டியில் பூபதி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் சிலை மறைத்து வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சுகுமாருக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் பூபதியின் விவசாயத் தோட்டத்தில் இருந்த சிலையை மீட்டு,  பென்னாகரம் வட்டாட்சியர் அழகுசுந்தரத்திடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார். மீட்கப்பட்ட 17.45  கிலோ எடை கொண்ட  படவேட்டம்மன் உலோகச் சிலையை பென்னாகரம் வட்டாட்சியர் அழகுசுந்தரம், ராணிப்பேட்டை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. கலைச்செல்வத்திடம் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.