
ஆற்காடு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆற்காட்டை அடுத்த திமிரி அருகே உள்ளஆயிரமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஏகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தனி நபர்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இதை நிர்வாகம் செய்வதில் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், செப்டம்பர் 18-ஆம் தேதி ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் தலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆயிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்காடு-ஆரணி சாலை வளையாத்தூர் இணைப்புச் சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சோபன்ராஜ், திமிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாலை மறியலில் ஈடுபட்ட ரஞ்சித் குமார் (23), சுரேஷ்குமார் (31) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





