விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

ஏடிஎம் அட்டை வந்த சில நிமிடங்களில்  வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 50 ஆயிரம் திருட்டு: எஸ்.பி. அலுவலகத்தில் ஆசிரியை புகார்

புதிய ஏடிஎம் அட்டை வந்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி ஆசிரியை வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

Published On :

புதிய ஏடிஎம் அட்டை வந்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி ஆசிரியை வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 
காட்பாடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அஸ்பியா பாத்திமா (24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். கடந்த மாதம் ஏடிஎம் அட்டைக்காக அவர் கணக்கு வைத்துள்ள வங்கியில் விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில், சில வாரங்களில் புதிய ஏடிஎம் அட்டை கூரியர் மூலம் அஸ்பியா பாத்திமா வீட்டிற்கு வந்துள்ளது.
அந்த ஏடிஎம் அட்டை வந்த அரைமணி நேரத்தில் அஸ்பியா பாத்திமாவின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், புதிய ஏடிஎம் அட்டை பதிவு செய்ய அதில் உள்ள எண்கள், ரகசிய எண் ஆகியவற்றை கேட்டராம். அந்த எண்களை அஸ்பியா பாத்திமா கூறிய சில நிமிடங்களிலேயே அவரது வங்கிக் கணக்கிலிருந்து 2 தவணையாக
ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 
இதுதொடர்பாக, அஸ்பியா பாத்திமா சம்பந்தப்பட்ட வங்கியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து கடலூர், விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் இருந்து பொருள்கள் வாங்கியதற்கு பணம் கழிக்கப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. 
இதனால் பாதிக்கப்பட்ட அஸ்பியா பாத்திமா, வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.