தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

வாலாஜாபேட்டை வன்னிவேடு ஊராட்சிக்கு உள்பட்ட ரபி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :

வாலாஜாபேட்டை வன்னிவேடு ஊராட்சிக்கு உள்பட்ட ரபி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவையொட்டி, அதிகாலை 5 மணியளவில் யாக சாலை பூஜை, நாடி சந்தனம், தத்துவார்ச்சனை, அவபிரத யாகம், யாத்ரா தானம், மகா பூர்ணா ஹுதி, தீபாராதனை, கலச புறப்பாடு ஆகியன நடைபெற்றன. 
தொடர்ந்து, 7.30 மணியளவில் செல்வ விநாயகர் கோயில் கோபுர கலசத்துக்கு வேத மந்திரங்கள் ஓத புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், முருகர், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நவக்கிரக மூர்த்திகள், துர்கையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மூலவர் செல்வ விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம்  நடத்தப்பட்டது. 
மேலும்,  நண்பகல் 12.30 மணியளவில் மூலருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றன. மாலை 5 மணியளவில் செல்வ விநாயகர் வீதிஉலா நடைபெற்றது.
விழாவில், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, வன்னிவேடு ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி.சக்திவேல்குமார், நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.வேதகிரி மற்றும் வாலாஜாபேட்டை, ரபி நகர் குடியிருப்பு வாசிகள் பங்கேற்று வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.