மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது: ஸ்மிருதி மந்தனா

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் மிகப் பெரிய சவால் காத்திருப்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

Smriti Mandhana

ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ

Published On :

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் மிகப் பெரிய சவால் காத்திருப்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

ஆசியப் போட்டி கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் சவால் காத்திருப்பதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசியப் போட்டிகளை ஒப்பிடும்போதும், உலக அளவிலான சர்வதேச கிரிக்கெட்டில் சவால்கள் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். உலகக் கோப்பை அல்லது ஒலிம்பிக்கில் வெல்வது போன்ற மிகப் பெரிய சவால்கள் அடுத்தடுத்து உள்ளன. அதனால் தொடர்ச்சியாக ஒரு அணியாக எங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆசியப் போட்டியின் வெற்றியிலேயே நாங்கள் தங்கிவிட முடியாது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எங்களுடைய கடின உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி செய்தால், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதற்கான சிறப்பான இடத்தில் இருப்போம். நடப்பு ஆசியப் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா தொடர்ந்து பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றார்.

ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team vice-captain Smriti Mandhana has stated that a massive challenge awaits in the quest to win an Olympic gold medal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.