ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இருவர் கைது

வேலூரில் ரூ. 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பட்டதாரி இளைஞர் வீட்டில் பெட்ரோல் வீசப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

Published On :

வேலூரில் ரூ. 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பட்டதாரி இளைஞர் வீட்டில் பெட்ரோல் வீசப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 
வேலூர் விருதம்பட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், லாரி சர்வீஸ் சென்டர் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் டிஜோவை (22), மர்மக் கும்பல் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி காரில் கடத்திச் சென்று ரூ. 1 கோடி கேட்டு மிரட்டினர்.
இதுதொடர்பாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, 18-ஆம் தேதி ரங்காபுரம் பகுதியில் டிஜோவை கடத்தல் கும்பல் விடுவித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் எண்ணைக் கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில், டிஜோவை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வேலூர், சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (35), காட்பாடி காங்கேயநல்லூர் சாலையைச் சேர்ந்த திலீப்குமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மன்சூர் உள்பட மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த செப்டம்பர் 1- ஆம் தேதி அதிகாலை டிஜோவின் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள், வீட்டினுள் இருந்த குளிர்சாதன கருவி, பல்வேறு பொருள்களும் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், டிஜோ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வேலூர் குளக்கரை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (20), ரஹீம் (21) ஆகிய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.