பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கிறிஸ்தவ ஆலயம் அருகே விநாயகர் சிலை: இந்து முன்னணிக்கு போலீஸ் தடை

அரக்கோணம் நகரில் கிறிஸ்தவ ஆலயம் அருகே விநாயகர் சிலை வைக்க இந்து முன்னணியினர் பந்தல் அமைக்க முயற்சித்த நிலையில், அதற்கு போலீஸார் புதன்கிழமை தடை விதித்தனர். 

Published On :

அரக்கோணம் நகரில் கிறிஸ்தவ ஆலயம் அருகே விநாயகர் சிலை வைக்க இந்து முன்னணியினர் பந்தல் அமைக்க முயற்சித்த நிலையில், அதற்கு போலீஸார் புதன்கிழமை தடை விதித்தனர். 
அரக்கோணம் சுவால்பேட்டை, தர்மராஜா கோயில் மைதானம் மற்றும் ராமர் கோயில் அருகே கலைவானர் தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை வைக்க நகர இந்து முன்னணியினர் பந்தல் அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர். அப்பகுதிக்கு அருகிலேயே கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இதனால், அங்கு விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த திருச்சபை நிர்வாகிகள், அரக்கோணம் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது. 
இதையடுத்து இரு தரப்பிலும் விசாரணை நடத்திய டி.எஸ்.பி. குத்தாலிங்கம், புதிதாக இந்த ஆண்டு அங்கு விநாயகர் சிலை வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. ஏற்கெனவே அப்பகுதிக்கு அருகில் தர்மராஜா கோயில் மைதானத்தில் ஒரு சிலையும்,  அதன் அருகில் முருகப்பா தெருவில் இந்து முன்னணி சார்பில் ஒரு விநாயகர் சிலையும் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் கூறுகையில், புதிதாக சிலை வைக்க எந்த இடத்திலும் அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கலைவாணர் தெருவில் இந்த ஆண்டு புதிதாக விநாயகர் சிலை வைக்க மேற்கொண்ட முயற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு எங்கெங்கு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதோ அந்த இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.