
வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய நாடாளுமன்ற சிறப்புக் குழு: நேபாளம்
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய 15 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி. - படம் - ஏஎன்ஐ
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய 15 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற சிறப்புக் குழுவை அந்த நாடு அமைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனி மற்றும் பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது.
இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் போட்டிகோஷி நதி, வெள்ள நீரை அடித்துச் சென்று, வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றதுடன் நீர்மின் திட்டங்களையும் சேதப்படுத்தியது.
இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,450 ஆக உயர்ந்துள்ளது, 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என நேபாளக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கும் இமயமலைப் பகுதியில் வெப்பநிலை உயர்வு, பனிப்பொழிவு மாற்றம், பனிப்பாறைகள் உருகி ஏரிகள் உடைதல் போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் அபாயங்களை ஆய்வு செய்வதற்காகவும் 15 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற சிறப்புக் குழு அமைக்கபப்ட்டுள்ளது.
இதுகுறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இந்தக் குழுவுக்கு முதல்கட்டமாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
Nepal has constituted a 15-member special parliamentary committee to assess the damage caused by floods in the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




