சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

வெள்ளப் பேரழிவு! உதவிகள் செய்ய சிறப்பு நிபந்தனைகள் பிறப்பித்த நேபாளம்!

வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உதவிகள் செய்ய முன்வரும் நாடுகளுக்கு சிறப்பு நிபந்தனைகள் பிறப்பித்திருக்கிறது நேபாளம்

nepal floods

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. - Nepal floods

Updated On :

நேபாளத்தில் புதன்கிழமை காலை நேரிட்ட பெரு வெள்ளத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உதவிகள் செய்ய பல்வேறு நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில் அதற்கு சில நிபந்தனைகளை நேபாள அரசு பிறப்பித்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சனிக்கிழமையும் நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன. சுமார் 3000 ராணுவத்தினர், 7450 பேர் கொண்ட மீட்புக் குழுக்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.

நேபாள பெரு வெள்ளத்தில் இதுவரை 600 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2000 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற சித்வன் பகுதியில் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் பிணவறைகளில் இடமில்லாத துயரம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளிடமிருந்து, சிறப்பு சேவை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் குழுவினரின் உதவியைத்தான் நேபாளம் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரங்கப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது நேபாளத்துக்கு புதிது என்பதால் சுரங்கப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிபுணர் குழுக்களை நேபாளம் வெளிநாடுகளிடம் கோருகிறது.

பொதுவாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான தேவைகள் இல்லை என்றும், தங்களிடம் இருக்கும் பாதுகாப்புப் படையினரே அப்பணிகளை மேற்கொள்ள போதுமானவர்கள் என்றும் நேபாளம் தெரிவித்திருந்தது.

ரசுவா மற்றும் நிவாகோட் பகுதிகளில் உள்ள ஹைட்ரோபவர் சுரங்கப் பாதைகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருப்பார்கள் என அஞ்சப்படுவதால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான குழுவை இந்தியா அனுப்பி வைக்கிறது.

Summary

Devastating floods! Nepal issues special conditions for providing aid!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.