மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

"திமுக ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை'

திமுக ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை தரப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:12 am IST

திமுக ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை தரப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம், மிட்டாளம் ஊராட்சிகளில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியது:
தற்போது கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டப்படி பணிகள்  தொடர்ந்து வழங்கப்படுவதில்லை. மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலை என்பது ஆண்டு முழுவதும் வேலை வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக் கடன்கள் ரத்து செய்யப்படும்.  கைலாசகிரி பகுதியில் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலின்போது எந்தக் கட்சி பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் சிந்தித்து வாக்களியுங்கள் என்றார் துரைமுருகன். 
கைலாசகிரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவில் இருந்து விலகிய 300 பேர் துரைமுருகன் முன்னிலையில்  திமுகவில் இணைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.